/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி கமிஷனர் பெயரில் மின் மீட்டர்; போலி ஆவணம் கொடுத்து இடம் மாற்றம்?
/
மாநகராட்சி கமிஷனர் பெயரில் மின் மீட்டர்; போலி ஆவணம் கொடுத்து இடம் மாற்றம்?
மாநகராட்சி கமிஷனர் பெயரில் மின் மீட்டர்; போலி ஆவணம் கொடுத்து இடம் மாற்றம்?
மாநகராட்சி கமிஷனர் பெயரில் மின் மீட்டர்; போலி ஆவணம் கொடுத்து இடம் மாற்றம்?
ADDED : டிச 18, 2024 11:17 PM

திருப்பூர்; மாநகராட்சி கமிஷனர் பெயரில் உள்ள மின்மீட்டரை போலி ஆவணம் கொடுத்து இடமாற்றம் செய்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் திருப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) விஜயேஸ்வரன் தலைமை வகித்தார். கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.
மின் நுகர்வோர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அந்தந்த பிரிவு அலுவலகம் மூலம், உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச., செயலாளர் சரவணன், மேற்பார்வை பொறியாளரிடம் அளித்த மனுவில்,''நெருப்பெரிச்சல் கிராமம், பாண்டியன் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே, மாநகராட்சி கமிஷனர் பெயரில் இருந்த மின் இணைப்பு மீட்டரை, போலி ஆவணங்கள் மூலம் இடமாற்றம் செய்துள்ளனர்.
நுாதன மோசடி குறித்து விசாரிக்க, சிறப்பு குழு அமைக்க வேண்டும். விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி கமிஷனர் பெயரில் உள்ள மின் இணைப்பை பாதுகாக்க வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர்(பொ) விஜயேஸ்வரனிடம் கேட்டபோது,'' மாநகராட்சி கமிஷனர் பெயரில் உள்ள மின் இணைப்பை, போலி ஆவணம் மூலமாக இடமாற்றம் செய்வதாக கூறும் புகார் மனு பெறப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

