ADDED : ஜன 04, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; தேசிய மின் சிக்கன வார விழாவை திருப்பூர் மின் பகிர்மான வட்டம், அவிநாசி கோட்டம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தலைமை வகித்து, துவக்கி வைத்தார். அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், மங்கலம் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நிறைவுற்றது.
உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார் (அனுப்பர்பாளையம்), முருகேசன் (அவிநாசி ஊரகம்), ராஜா (நகர்), சந்திரசேகரன் (கருவலுார்), ரவிக்குமார் (குன்னத்துார்) மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

