/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலிக்கு பாய்ச்ச மின்சாரம் திருட்டு; மர்ம நபர்கள் செயலால் பரபரப்பு
/
வேலிக்கு பாய்ச்ச மின்சாரம் திருட்டு; மர்ம நபர்கள் செயலால் பரபரப்பு
வேலிக்கு பாய்ச்ச மின்சாரம் திருட்டு; மர்ம நபர்கள் செயலால் பரபரப்பு
வேலிக்கு பாய்ச்ச மின்சாரம் திருட்டு; மர்ம நபர்கள் செயலால் பரபரப்பு
ADDED : பிப் 06, 2025 09:39 PM
உடுமலை; உடுமலை அருகே, உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் எடுத்து, சீமை கருவேல காட்டில், மின்வேலி அமைத்திருந்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை அருகே ஆலாமரத்துார் துணை மின்நிலையத்தில் இருந்து, அம்மாபட்டி கிராமத்துக்கு உயர் மின்னழுத்த பாதை செல்கிறது. இந்த மின்கம்பங்கள் அமைந்துள்ள பகுதி வழியாக, மின்வாரிய ஊழியர்கள் நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கே நடமாட்டம் இல்லாத பகுதியிலுள்ள சீமைகருவேல காட்டில், உயர் மின்னழுத்த பாதை மின்கம்பியில் இருந்து மின்சாரம் எடுத்து, வேலியில் பாய்ச்சியிருந்தது தெரியவந்தது. இதனால், மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
'காட்டுப்பன்றிகளை கொல்ல மர்மநபர்கள், உயர் மின்னழுத்த பாதையில், மின்சாரம் திருடி, வேலியில் பாய்ச்சி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மின்வாரிய ஊழியர் ஒருவர் சமூக வலை தளங்களில் பதிவிட்டிருந்தார். அப்பதிவு சுற்றுப்பகுதி விவசாயிகளிடையே பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து, ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.