/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; நிவாரணம் கேட்டு போராட்டம்
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; நிவாரணம் கேட்டு போராட்டம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; நிவாரணம் கேட்டு போராட்டம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; நிவாரணம் கேட்டு போராட்டம்
ADDED : பிப் 19, 2025 10:55 PM

திருப்பூர்; திருப்பூர், ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 30; கட்டட தொழிலாளி. நேற்று திருமுருகன் பூண்டி, ராக்கியாபாளையத்தில் உள்ள ஒரு கோவில் கட்டட பணியில் ஈடுபட்டு வந்தார்.
பணியின்போது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு இறந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். லோகநாதனுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையே லோகநாதனின் உடல், அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது.
இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மனைவி மற்றும் மகள்கள், உறவினர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையேற்று, நான்கு மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக்கொண்டு லோகநாதனின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.