ADDED : ஏப் 22, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில், திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
'ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நேரடி தினக்கூலி வழங்க வேண்டும்; கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர்மாற்றம், களஉதவியாளர் பதவி மாற்றம் வழங்க வேண்டும். 2019 முதல் வழங்க வேண்டிய ஆறு சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்ஊழியர்கள் கோஷம் எழுப்பினர்.
மாவட்ட தலைவர் வீரன் தலைமை வகித்தார். பொருளாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி, மாநில துணைத்தலைவர் நாகராஜ் பேசினார்.