UPDATED : ஆக 20, 2026 09:59 PM
ADDED : ஆக 20, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்கள் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் பி.என். ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மின்வாரியத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
