தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்


UPDATED : ஆக 20, 2026 09:59 PM

ADDED : ஆக 20, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 09:59 PM ADDED : ஆக 20, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 8:00 முதல் 9:00 மணி வரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய வேண்டும்; செவிலியர் பணியிடங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது; 'செவிலியர் அலுவலர்' என்ற பதவிப் பெயரை மாற்ற வேண்டும்; ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 121 செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை, குழந்தைகள் நலன், மகப்பேறு பிரிவு செவிலியர்கள் தவிர, மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொருளாளர் கீதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அம்மாசை ஒருங்கிணைத்தார்.

செவிலியர்கள் கூறுகையில், ''அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அதேநேரம், புதிய பணியிடங்களை உருவாக்காமல் இந்த அறிவிப்பை செயல்படுத்துவதால், பணிச்சுமை குறையாது. எனவே, முதலில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். போராட்டம் வரும் 22ம் தேதி வரை தொடரும்'' என்றனர்.

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us