மின்னணு கழிவு தரம் பிரிப்பு சிறப்புக் குழந்தைகள் ‘சிறப்பு’
மின்னணு கழிவு தரம் பிரிப்பு சிறப்புக் குழந்தைகள் ‘சிறப்பு’
UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 10:16 PM

அ நிறம் | அளவு
பெருமாநல்லுார்: உலக மின்னணுக் கழிவு தினத்தையொட்டி, ‘வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன்’ சார்பில் பெருமாநல்லுார் சாய்கிருபா சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தொலைக்காட்சி, செல்போன், மின்விளக்குகள் உள்ளிட்ட பழுதடைந்த மின்னணுப் பொருட்களைத் துாக்கி எறியாமல், அவற்றில் உள்ள நச்சுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பிளாஸ்டிக், உலோகப் பாகங்களைத் தனித்தனியாகப் பிரிப்பது குறித்து கார்த்திகேயன் பயிற்சி அளித்தார். சிறப்புக் குழந்தைகளும் மின்னணுக் கழிவுகளைத் தரம் பிரித்து அசத்தினர். பள்ளித் தாளாளர் கவின் திருமுருகன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சுப்ரமணியம், குமார், ரமேஷ், ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
