/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுலா பயணியரை வரவேற்க யானை! ரோடு சந்திப்பில் உற்சாகம்
/
சுற்றுலா பயணியரை வரவேற்க யானை! ரோடு சந்திப்பில் உற்சாகம்
சுற்றுலா பயணியரை வரவேற்க யானை! ரோடு சந்திப்பில் உற்சாகம்
சுற்றுலா பயணியரை வரவேற்க யானை! ரோடு சந்திப்பில் உற்சாகம்
ADDED : பிப் 06, 2025 08:54 PM

உடுமலை; சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திருமூர்த்திமலை ரோட்டிலுள்ள சந்திப்பு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், அமைக்கப்பட்ட சிலைகள், அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோடு, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரோடாகும்.
இந்த ரோட்டில், போடிபட்டி அருகே கிராம இணைப்பு ரோடு சந்திக்கும் சந்திப்பு பகுதி உள்ளது.
இப்பகுதியில், விபத்துகளை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில், சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பணிகள் கடந்தாண்டு துவங்கியது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு விரிவாக்கப்பட்டதுடன், 'ரவுண்டானா'வும் அமைக்கப்பட்டது.
தற்போது, அவ்விடத்தை பொலிவுபடுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரவுண்டானாவில், வனவிலங்குகளின் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகங்கள் வழியாக செல்லும் ரோடு என்பதால், வனத்தின் சிறப்பாக கருதப்படும் யானை சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அவ்வகையில், ரவுண்டானாவில், ஒரு யானை, குட்டி யானை, 2 மான், 2 வரையாடு சிலை அமைத்து, சுற்றிலும் புல் தரை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த சிலைகள் அவ்வழியாக செல்வோரை ஈர்த்து, புதிய 'செல்பி ஸ்பாட்' ஆக மாறியுள்ளது. இரவு நேரங்களில் சிலைகள் மிளிரும் வகையில், மின்விளக்குகளும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொருத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா முக்கியத்தும் வாய்ந்த ரோட்டில், பயணியரை வரவேற்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள யானை மற்றும் இதர வனவிலங்குகளின் சிலைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.

