/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக., 1 முதல் இ.எல்.ஐ., திட்டம் அமலாகிறது; திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு 'ஜாக்பாட்'
/
ஆக., 1 முதல் இ.எல்.ஐ., திட்டம் அமலாகிறது; திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு 'ஜாக்பாட்'
ஆக., 1 முதல் இ.எல்.ஐ., திட்டம் அமலாகிறது; திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு 'ஜாக்பாட்'
ஆக., 1 முதல் இ.எல்.ஐ., திட்டம் அமலாகிறது; திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு 'ஜாக்பாட்'
ADDED : ஜூலை 29, 2025 11:43 PM

திருப்பூர்; மத்திய அரசு அறிவித்திருந்த, வேலை வாய்ப்புடன் இணைந்து ஊக்கத்தொகை (இ.எல்.ஐ.,) திட்டம், ஆக., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
தொழிற்சாலைகள் மற்றும் புதிய தொழிலாளர்களை உருவாக்கும் வகையில், 99 ஆயிரத்து, 446 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இ.எல்.ஐ., திட்டம் அறிவிக்கப்பட்டது. வரும் ஆக., 1 முதல் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தில், 1.92 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆக., 1ல் துவங்கும் இத்திட்டம், 2027 ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும். முதல் முறையாக தொழிலாளராக வருவோர், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணையும் போது, ஊக்கத்தொகை பெறலாம். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, இரண்டு தவணையாக வழங்கப்படும்.
புதிதாக பணியில் சேர்ந்து வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்கும், ஒவ்வொரு தொழிலாளருக்கும், தலா, 3 ஆயிரம் ரூபாய் வீதம், தொழிற்சாலைகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான சேவைக்காக, வருங்கால வைப்பு நிதி மண்டலம் வாரியாக, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வரும், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 'கிளஸ்டர்' அதிகம் பயன்பெறும் என, தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'பின்னலாடை தொழிலில், மாதந்தோறும், புதிய தொழிலாளர் பணியில் சேர்கின்றனர். குறிப்பாக, வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர்.
இ.எல்.ஐ., திட்டத்தால், புதிதாக வரும் தொழிலாளர் ஊக்கத்தொகை பெறலாம். இத்திட்டத்தால், தொழிற்சாலைகளும், தொழிலாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத்தொகை பெறலாம். இதனால், தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவது எளிதாகும்,' என்றனர்.

