/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!திட்டமின்றி அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்
/
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!திட்டமின்றி அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!திட்டமின்றி அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!திட்டமின்றி அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்
ADDED : ஜன 16, 2024 02:39 AM
பல்லடம், கரைப்புதூர் கிராமத்தில், திட்டமின்றி அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் குறித்து, ஆய்வு மேற்கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், தீர்வு காண முயற்சித்து வருகின்றனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி, அய்யம்பாளையம் கிராமத்தில், தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2021--22ல், 13.23 லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் கட்டப்படுமான பணிகள் நிறைவடைந்து நிலையில், கழிவு நீரை கொண்டு சேர்ப்பதற்கான 'டிஸ்போசல் பாய்ண்ட்' இல்லாமல், கழிவுநீர் தேங்கி, கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.
இது குறித்து பொதுமக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்த நிலையில், ஓராண்டுக்கு மேல் ஆகியும் தீர்வு ஏற்படுத்தப்படவில்லை. நேற்று, இப்பிரச்னை தொடர்பாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
கழிவு நீர் கால்வாய் அமைக்குமபோதே, 'டிஸ்போஸல் பாயிண்ட்' உள்ளதா என்பதை உறுதி செய்த பின் பணிகளை துவங்கி இருக்க வேண்டும். திட்டமிடல் இல்லாமல், அவசரக் கதியில் பணிகளை துவங்கி விட்டு, இப்போது, 'டிஸ்போசல் பாயிண்ட்' இன்றி, கழிவு நீரை கொண்டு செல்ல வழி இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
திட்டமிடாமல் மேற்கொள்ளப்பட்ட இப்பணிக்கு அதிகாரிகள் எவ்வாறு ஒப்புதல் அளித்தார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதிகாரிகளே ஒப்புதலும் அளித்துவிட்டு, தற்போது, தீர்வு காண முடியாமல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
உரிய திட்டமிடாமல் பணிகளை மேற்கொண்டு, மக்கள் வரி பணத்தை வீணடித்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.