/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு'
/
'1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு'
ADDED : ஆக 21, 2025 11:01 PM

திருப்பூர்; ''திருப்பூரில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன'' என்று ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், மத்திய அரசின் சமர்த் திட்டத்தில், தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளித்துவருகின்றன. திறன் பயிற்சி அளித்துவரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடந்தது. 19 பயிற்சி மையத்தினருக்கு, மொத்தம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தினருக்கு ஊக்கத்தொகைக்கான காகசோலை வழங்கி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:
திருப்பூரில், சமர்த் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளித்துவரும் நிறுவனங்களுக்கு, நான்கு தவணைகளாக இதுவரை, மொத்தம் 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், 15 ஆயிரத்து 193 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் 2 ஆயிரத்து 835 பேர் பயிற்சி பெற்றுவருகின்றனர்.
திருப்பூரில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன், இணைச்செயலாளர் குமார், சமர்த் திட்ட துணைக்குழு தலைவர் சக்திவேல் உள்பட பின்னலாடை துறையினர் பங்கேற்றனர்.
----
'சமர்த்' திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி அளித்து வரும் நிறுவனத்தினருக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் வழங்கினார். அருகில், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணைச்செயலாளர் குமரன்.