/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர ரோடுகளில் ஆக்கிரமிப்பு கடைகள்; கால்நடைகள் 'உலா'; மக்கள் பாதிப்பு
/
நகர ரோடுகளில் ஆக்கிரமிப்பு கடைகள்; கால்நடைகள் 'உலா'; மக்கள் பாதிப்பு
நகர ரோடுகளில் ஆக்கிரமிப்பு கடைகள்; கால்நடைகள் 'உலா'; மக்கள் பாதிப்பு
நகர ரோடுகளில் ஆக்கிரமிப்பு கடைகள்; கால்நடைகள் 'உலா'; மக்கள் பாதிப்பு
ADDED : ஆக 14, 2025 08:42 PM

உடுமலை; உடுமலை பிரதான ரோடுகளில், ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கால்நடைகள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை நகரில் பிரதான ரோடுகளான, பழநி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, சந்தை ரோடு, கல்பனா ரோடு, கச்சேரி வீதி உள்ளிட்ட ரோடுகளில், கடைகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் அதிகளவு காணப்படுகிறது.
இந்த ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகளவு காணப்படுகிறது. தமிழக முதல்வர் வருகைக்காக, ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால், ரோடுகள் விசாலமாக காணப்பட்டன.
நிகழ்ச்சி முடிந்த நிலையில், மீண்டும் ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், வெங்கட கிருஷ்ணா ரோட்டில், ரோட்டை ஆக்கிரமித்து, நிரந்தர கடைகள் அமைக்கும் பணி நடந்து வருவதோடு, இந்த ரோட்டில் வாகனங்களில் செல்வோரை, ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்கள் மிரட்டும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.
அதே போல், ரோடுகள் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, தற்போது தெரு நாய்கள் மற்றும் ஆடு, மாடுகள் என கால்நடைகள் ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது.
நகர ரோடுகளில், தெரு நாய்களும், ஆடு, மாடு வளர்ப்போர், கட்டுப்பாடின்றி, கால்நடைகளை ரோடுகளில் மேய விடுகின்றனர். இதனால், வாகனங்களில் செல்வோர் பாதிப்பதோடு, மாடுகள் முட்ட வருவதால், அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போக்குவரத்து மிகுந்த ரோடுகளில், கால்நடைகள் 'உலா' வருவதால், போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.
எனவே, நகராட்சி அதிகாரிகள், ரோடுகளை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றவும், ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும் வேண்டும்.