/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி - மங்கலம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்
/
அவிநாசி - மங்கலம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்
அவிநாசி - மங்கலம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்
அவிநாசி - மங்கலம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்
ADDED : ஏப் 03, 2025 05:48 AM

அவிநாசி; உணவகம், பேக்கரி, ஹார்டுவேர்ஸ், வெல்டிங் ஒர்க் ஷாப், வீட்டு உபயோக பொருட்கள், ரெஸ்டாரன்ட் என பலதரப்பட்ட கடைகள் அவிநாசியிலிருந்து வஞ்சிபாளையம் மற்றும் மங்கலம் செல்லும் சாலைகளில் உள்ளன.
கடை பெயர்ப்பலகை, விளம்பர போர்டுகளை மட்டுமின்றி பொருட்களையும் பெரும்பாலான கடைகள், கடைக்கு வெளியே வைத்ததால், இச்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால், விபத்துகள் தொடர்ந்தன.
இந்நிலையில், அவிநாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவேல் முன்னிலையில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அவிநாசி - மங்கலம் ரோட்டில் நேற்று கடைகள் முன்பு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகளை அகற்றினர்.
கட்டடங்கள், கடைகளின் ஷட்டர்கள் விதிமீறி கட்டப்பட்டிருந்தால், தாங்களாகவே உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு மூன்று நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அகற்றாவிட்டால் ஊழியர்களே அகற்றுவர் என்று எச்சரிக்கப்பட்டது.
கடை மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களின் கடை அளவிற்குள் விளம்பரப் பலகைகள், பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
நேற்று மங்கலம் ரோட்டில் ஒரு பகுதியில் இருந்த அனைத்து கடைகளின் விளம்பர போர்டுகளும் முற்றிலுமாக அகற்றப்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவேல் தெரிவித்தார்.

