தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: 3வது முறையாக நிறுத்தம்

 ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: 3வது முறையாக நிறுத்தம்

 ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: 3வது முறையாக நிறுத்தம்


ADDED : ஜூன் 23, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: ஜி.என்.கார்டன் பகுதியில், பி.ஏ.பி. வாய்க்கால் மீதான ஆக்கிரமிப்பு நேற்று மூன்றாவது முறையாக நிறுத்தப்பட்டது. வருவாய் துறை உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, 60வது வார்டு, தாராபுரம் ரோடு, ஜி.என். கார்டன் செல்லும் ரோட்டில், பி.ஏ.பி. உள்ளது. இதன் ஒரு பகுதியில் தனியார் ஒருவர் பல நுாறு மீட்டர் நீளம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதற்கேற்ப மின் வாரியமும் மின்கம்பங்களை அமைத்துள்ளது. இது குறித்து, மோகன் என்பவர், ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

ஓராண்டுக்கும் மேலாக, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, மின் வாரியம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு இது குறித்து தொடர்ந்து புகார்கள் அனுப்பி, விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆர்.டி.ஒ, உத்தரவு பிறப்பித்தார்.

ஆக்கிரமிப்பு நபருக்கு தகவல் அளித்து அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின்னரும், அகற்றப்படாத நிலையில் உரிய போலீஸ் பாதுகாப்புடன் அதை அகற்ற அறிவிக்கப்பட்டது. இதற்காக அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுவரை இரண்டு முறை ஆக்கிரமிப்பு அகற்றச் சென்றும், அகற்றாமல் திரும்பினர்.

நேற்று காலையும், அதிகாரிகள் சென்றனர். அப்போது மாவட்ட நிர்வாகத்திடமிருந்து, இப்பிரச்னை குறித்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். அதன் மீதான விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெவிரிக்கப்பட்டது. இதனால், நேற்று மூன்றாவது முறையாக அந்த ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பினர்.

வழக்கு தொடர முடிவு புகார்தாரர் மோகன் கூறியதாவது:

ஆக்கிரமிப்பு அகற்ற உரிய விதிகளின் கீழ் உத்தரவிட்டும் செயல்படுத்த முடியாமல் ஒரு சக்தி அதிகாரிகளை இயக்குகிறது. இது குறித்து புகார் அளித்த காரணத்தால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

அது குறித்து புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போதும் அதிகாரிகள் பின்வாங்கியுள்ளனர். இதற்கான காரணம் தெரியவில்லை. கலெக்டரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கவுள்ளேன். அடுத்த கட்டமாக அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்ந்து சட்டரீதியாக எதிர்கொள்வேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us