தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூன் 23, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n கும்பாபிஷேக விழா ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், கன்னிமார் கருப்பராயன் சுவாமி, மஹா மாரியம்மன் கோவில், குருநாதம்பாளையம், உகாயனுார், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை - அதிகாலை, 4:00 மணி முதல். ஆலடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் - 5:45 மணி, கன்னிமார் கருப்பராயன், செல்வ விநாயகர் கும்பாபிஷேகம் - காலை, 6:00 முதல், 7:00 மணிக்குள். மஹா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை, 7:00 மணி.

l அருளானந்த ஈஸ்வர சுவாமி கோவில், படேல் வீதி, பல்லடம். மஹா கும்பாபிேஷக விழா - காலை, 6:00 முதல், 7:00 மணிக்குள்.

l முனியப்புச்சி சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில், பெரியநாதம்பாளையம், அவிநாசி. கலசங்கள் புறப்பாடு - காலை, 6:00 மணி, மஹா கும்பாபிஷேகம் - காலை, 7:30 மணி. அலங்கார தீபாராதனை, அன்னதானம் - காலை, 9:00 மணி.

l ஸ்ரீ கனரத்தின விநாயகர் கோவில், காட்டூர் கிராமம், பல்லடம். காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள்.

l சித்தி விநாயகர், மாகாளியம்மன், கன்னிமார், கருப்பராயசுவாமி கோவில், பெருந்தொழுவு, திருப்பூர். மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, மஹா கும்பாபிஷேகம் - காலை, 4:00 முதல், 9:00 மணிக்குள். அன்னதானம் -காலை, 8:00 மணி.

தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வரசுவாமி, விசாலாட்சியம்மன், சுப்பிரமணியசுவாமி கோவில், நல்லுார். சுவாமி திருவீதி உலா - காலை, 9:00 மணி, அபிஷேகம் அலங்கார பூஜை - காலை, 10:00 மணி, சூரிய பிரபை வாகன காட்சி சுவாமி திருவீதி உலா - இரவு, 7:00 மணி. திருவாசக இசைகச்சேரி - மாலை, 6:00 மணி.

மகாசக்தி யாகபூஜை விழா ஒன்பதாம் ஆண்டு ஸ்ரீ பாசுபதாஸ்திர மஹாசக்தி யாக பூஜை விழா, ஸ்ரீ சுவேத விநாயகர், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீ வள்ளி தெய்வானை, கந்த சுப்பிரமணியர் கோவில், வள்ளியம்மாள் நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். தீர்த்தம் எடுத்து வருதல் - காலை, 5:00 மணி.

ஸ்ரீ சுதர்சன ஹோமம் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், பெரும்பண்ணை கோவில் வழி, திருப்பூர். சுதர்சன ஹோமம் - காலை, 10:00 மணி.

ஏகாதச ருத்ர ஹோம விழா ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் சுவாமி கோவில், வேலம்பாளையம். விக்னேஸ்வர பூஜை, மூலவருக்கு கட அபிஷேகம் - காலை, 6:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

தொட்டப்ப பெருவிழா ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், புதுராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். தீர்த்தம் கொண்டு வருதல் - காலை,6:00 மணி.

n பொது n யோகா தினம்கொண்டாட்டம் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். காலை, 9:30 முதல், 10:00மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us