/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு; புளியம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் புகார்
/
ஊராட்சி அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு; புளியம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் புகார்
ஊராட்சி அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு; புளியம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் புகார்
ஊராட்சி அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு; புளியம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் புகார்
ADDED : ஜன 24, 2025 11:33 PM

பல்லடம்; புளியம்பட்டி ஊராட்சி அலுவலகம் செல்லும் வழித்தடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக, பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி அலுவலகம், கிராமத்தின் மையப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு இடையே அமைந்துள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வருவாய் துறைக்கு பொதுமக்கள் அளித்துள்ள புகார்: புளியம்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல இரு வேறு வழிகள் உள்ளன.
இவற்றில், மெயின் ரோட்டில் இருந்து ஊராட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கான வழித்தடம், தனியார் சிலரால் வேலி அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஊராட்சி அலுவலகம் செல்ல மற்றொரு வீதியை சுற்றி வர வேண்டி உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இது குறித்து தெரியப்படுத்தவும் அகற்றிக்கொள்ள மறுக்கின்றனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி ஊராட்சி அலுவலகத்துக்கு செல்லும் வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் என்றனர்.
பல்லடம் தாசில்தார் ஜீவாவிடம் கேட்டதற்கு, 'ஏற்கனவே இது குறித்த புகார் கிடைக்கப்பெற்றது. உரிய அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின், ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால், நிச்சயம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வழித்தடம் மீட்கப்படும்' என்றார்.

