sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொது வழி ஆக்கிரமிப்பு... 'பொல்லாத' சாலையால் பாதிப்பு!

/

பொது வழி ஆக்கிரமிப்பு... 'பொல்லாத' சாலையால் பாதிப்பு!

பொது வழி ஆக்கிரமிப்பு... 'பொல்லாத' சாலையால் பாதிப்பு!

பொது வழி ஆக்கிரமிப்பு... 'பொல்லாத' சாலையால் பாதிப்பு!


ADDED : டிச 25, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 25, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோடு படுமோசம்

திருப்பூர், பி.என்., ரோடு, பிச்சம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.

- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)கழிவுநீர் தேக்கம்

திருப்பூர், ஆலங்காடு, அறிவுத்திருக்கோவில் அருகே, கால்வாய் கட்டியும் பயனில்லை. கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது.- கந்தசாமி, ஆலங்காடு. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருமுருகன்பூண்டி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன் குழாய் உடைந்து தண்ணீர் சாலை முழுதும் வீணாகிறது. இச்சாலையில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. தண்ணீர் விரயத்தை தடுக்க வேண்டும்.

- விஜி, கூட்டுறவு நகர். (படம் உண்டு)

குழியால் ஆபத்து

திருப்பூர், இடுவம்பாளையம் ரோட்டில் குழாய் பதிக்க தோண்டிய குழியை மூட வேண்டும். வாகன ஓட்டிகள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.

- சுரேஷ், இடுவம்பாளையம். (படம் உண்டு)

திருப்பூர் மாவட்ட மைய நுாலக வாயிலில் உள்ள சாக்கடை கால்வாய் உடைந்துள்ளது. பாதசாரிகள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. குழியை மூட வேண்டும்.

- தங்கப்பாண்டி, பார்க்ரோடு. (படம் உண்டு)

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரம் இரண்டாவது வீதியில் நடுரோட்டில், குழியை சிலாப் போட்டு மூட வேண்டும். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

- சின்னச்சாமி, ரங்கநாதபுரம். (படம் உண்டு)

குப்பை அள்ளுங்க...

அவிநாசி, ரங்கா நகரில் விவசாய நிலத்தை ஒட்டி வீசியெறிப்படும் குப்பைகளால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தேங்கிய குப்பை அள்ள வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- வெங்கடேஸ்வரி, ரங்கா நகர். (படம் உண்டு)

திருப்பூர், 55 வது வார்டு, பெரிச்சிபாளையம் தெற்கு, ஊர் கவுண்டர் நகரில் குப்பைகள் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ள வேண்டும்.

- யோகேஷ், ஊர் கவுண்டர் நகர். (படம் உண்டு)

அதிகாரிகள் கவனத்துக்கு

திருப்பூர், தாராபுரம் ரோட்டில் பயணிக்கும், குடிநீர் வடிகால் வாரிய மெயின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அடிக்கடி வீணாகிறது. அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.

- சதீஷ்பிரபு, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)

ஆக்கிரமிப்பு அகற்றுங்க

திருப்பூர், முத்தணம்பாளையம், ஸ்ரீ குருவாயூரப்பன் நகர், இரண்டாவது வீதியில் பொது வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பள்ளி பஸ்கள், வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளது. அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.

- ஜோதிஸ்வரன், ஸ்ரீ குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us