/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம 'ரிசர்வ் சைட்'களில் ஆக்கிரமிப்பு; மீட்க நடவடிக்கை தேவை
/
கிராம 'ரிசர்வ் சைட்'களில் ஆக்கிரமிப்பு; மீட்க நடவடிக்கை தேவை
கிராம 'ரிசர்வ் சைட்'களில் ஆக்கிரமிப்பு; மீட்க நடவடிக்கை தேவை
கிராம 'ரிசர்வ் சைட்'களில் ஆக்கிரமிப்பு; மீட்க நடவடிக்கை தேவை
ADDED : செப் 07, 2025 09:21 PM
உடுமலை; உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள 'ரிசர்வ் சைட்'களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒன்றியங்களில் அந்தந்த ஊராட்சிகளுக்கான மனைகள் பிரிக்கும் போது, பொது ஒதுக்கீடு இடம் ஊராட்சி நிர்வாகத்துக்குட்பட்டதாக விடப்படுகிறது.
இந்த இடங்களில் பூங்கா அல்லது வேறு பொது தேவைக்கான கட்டடங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஆவனங்களுடன் 372 ரிசர்வ் சைட்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இங்குள்ள பல ஊராட்சிகளில் ரிசர்வ் சைட்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன. வணிக கடைகளாகவும், குடியிருப்புகளாகவும் கட்டமைப்பு அமைத்துள்ளனர்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு இவ்வாறு ஆக்கிரமிப்புள்ளான ரிசர்வ் சைட்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்த குழு அமைக்கப்பட்டது. இதன் குழுவின் வாயிலாக பதிவு செய்யப்பட்ட பொது இடங்கள் கண்டறியப்பட்டன. மேலும், வரைபடத்தில் பொது இடங்களாக பிரிக்கப்பட்டு, ஆனால் பதிவு செய்யப் படாதவைகளும் கண்டறிப்பட்டன.
ஆனால் அதன் பின், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை. இதனால், மீண்டும் கிராமப்பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
பொது இடங்களில் பூங்கா அமைப்பது, அல்லது பொதுமக்களுக்கு பயன்பாடுள்ள வகையில் அவற்றை மாற்றுவதற்கு ஒன்றிய நிர்வாகத்தினர் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.