/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊத்துக்குளி ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ஊத்துக்குளி ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : டிச 11, 2025 04:55 AM

திருப்பூர்: நவ. இறுதி வாரம் திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், பாரப்பாளையம் துவங்கி கூலிபாளையம், எஸ்.பெரியபாளையம் பெட்டிக்கடை வரை ஐந்து கி.மீ., துாரத்துக்கு அளவீடு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஓரிரு வாரங்களில்ஆக்கிரமிப்புகளை அகற்று மாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
ஆனாலும், பலர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாமல், நெடுஞ்சாலைத்துறை இடங்களை ஆக்கிரமித்திருந்தனர். நேற்று, பாரப்பாளையம் பஸ் ஸ்டாப், போலீஸ் சோதனைச்சாவடி அருகே, கூலிபாளையம் நால்ரோடு உள்ளிட்ட இடங்களில் துவங்கி, எஸ்.பெரியபாளையம் வரை இயந்திர உதவியுடன் கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்; ஆக்கிரமிப்பு பொருட்களை லாரியில் எடுத்துச்சென்றனர். முன்னெச்சரிக்கையாக நல்லுார், ஊத்துக்குளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

