/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதிரி பாகம் இறக்குமதியை தவிர்க்க... கோவையிலேயே இயந்திரம் உற்பத்தி துவக்கம் : திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்ய முனைப்பு
/
உதிரி பாகம் இறக்குமதியை தவிர்க்க... கோவையிலேயே இயந்திரம் உற்பத்தி துவக்கம் : திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்ய முனைப்பு
உதிரி பாகம் இறக்குமதியை தவிர்க்க... கோவையிலேயே இயந்திரம் உற்பத்தி துவக்கம் : திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்ய முனைப்பு
உதிரி பாகம் இறக்குமதியை தவிர்க்க... கோவையிலேயே இயந்திரம் உற்பத்தி துவக்கம் : திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்ய முனைப்பு
ADDED : மே 04, 2024 11:25 PM
திருப்பூர்:ஒவ்வொரு ஆண்டும், இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதி அதிகரித்து வருவதால், தற்சார்பு முறையில், கோவையிலேயே தயாரிக்கலாம் என, கோவை மற்றும் திருப்பூர் தொழில்துறையினர் கைகோர்த்துள்ளனர்.
நாட்டில், ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையான தொழில்களில் சிறந்து விளங்குகின்றன. தமிழகம் மட்டும், ஜவுளி, ஆட்டோமொபைல், மொபைல் போன், இயந்திரம் என, பல்வேறு வகையான தொழில்களில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, உள்நாட்டு உற்பத்திக்காக, வெளிநாட்டு இயந்திரங்களையே அதிகம் சார்ந்திருக்கிறது.
வளர்ந்த நாடுகளும், இந்தியா போன்ற வேகமாக வளரும் நாடுகளுக்கு நவீன இயந்திரம் ஏற்றுமதி செய்வதை வாடிக்கையாக உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை காட்டிலும், இறக்குமதி அதிகம் நடப்பதால், பொருளாதாரத்தை ஈடுகட்ட சிரமப்பட வேண்டியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆய்வுகள் வாயிலாக, இயந்திரம் மற்றும் இயந்திர தளவாட உற்பத்தியில், தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என்று உறுதியேற்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறப்பான இடத்தில் இருக்கும் திருப்பூர் புதிய திட்டத்தை தயாரித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் இயந்திரங்களையே தொழிலில் அதிகம் பயன்படுத்துகிறோம்; அவற்றிற்கான உதிரி பாகங்களும் இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இனிமேலாவது, இயந்திர வடிவமைப்பு மற்றும் உதிரி பாகம் உற்பத்தியை, உள்ளூரிலேயே வடிவமைக்கும் முயற்சிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து, இன்ஜினியரிங் பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், இறக்குமதியும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது; இவற்றை கட்டுப்படுத்திட, உள்நாட்டிலேயே தயாரிப்பு துவங்கப்பட வேண்டும் என்கின்றனர்.
ஏற்றுமதியும்
உயர்ந்தது
தேசிய அளவில், 2022-23ம் ஆண்டில், இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி, எட்டு லட்சத்து, 59 ஆயிரத்து, 265 கோடி ரூபாயாக இருந்தது; கடந்த நிதியாண்டில் (2023-24), ஒன்பது லட்சத்து, 05 ஆயிரத்து, 085 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல், எலக்ட்ரிக்கல் பொருட்கள் ஏற்றுமதியும், ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 951 கோடி ரூபாயாக இருந்தது, இரண்டு லட்சத்து, 41 ஆயிரத்து, 157 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல், வெளிநாடுகளில் இருந்து, இயந்திர உதிரி பாகங்கள் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் உதிரி பாகம் இறக்குமதி, 2022- 23ல் 35 ஆயிரத்து, 455 கோடி ரூபாயாக இருந்தது; கடந்த ஆண்டில், 40 ஆயிரத்து, 040 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரூ.4.04 லட்சம்
கோடி இறக்குமதி
இதேபோல், இயந்திரங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் 'நான் எலக்ட்ரிக்கல்' இயந்திரங்கள் இறக்குமதியானது, மூன்று லட்சத்து, 65 ஆயிரத்து 421 கோடி ரூபாயாக இருந்தது; 2023-24ம் ஆண்டில், நான்கு லட்சத்து, 04 ஆயிரத்து, 732 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அருகே உள்ள கோவை மாவட்டத்தில் இருந்து, ராணுவத்துக்கே உதிரிபாகம் தயாரிக்கப்படும் போது, திருப்பூருக்கு தேவையான இயந்திரம் மற்றும் உதிரி பாகம் உற்பத்தியை துவக்கலாமே என, திருப்பூர் யோசனை தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக, கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, கொடீசியா போன்ற அமைப்புகளுடன் இணைந்து, அதற்கான முயற்சியும் துவங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இயந்திரங்களின் உதிரி பாகம் கண்காட்சியை கோவையில் நடத்தி, திருப்பூருக்கு தேவையான உதிரி பாகங்களை, கோவையிலேயே தயாரிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பின்னலாடை இயந்திர வடிவமைப்பு மற்றும் உதிரி பாகம் உற்பத்தியை, உள்ளூரிலேயே வடிவமைக்கும் முயற்சிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது