/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் பாலங்கள் நிலை குறித்து பொறியாளர் ஆய்வு
/
ரயில் பாலங்கள் நிலை குறித்து பொறியாளர் ஆய்வு
ADDED : நவ 30, 2024 04:36 AM
திருப்பூர், : திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் உயர்மட்ட ரயில் பாலம், முதல் மற்றும் 2வது ரயில்வே கேட், சபாபதிபுரம் சுரங்கப்பாலம் உள்ளிட்ட இடங்களில், நபார்டு மற்றும் கிராம சாலைகள், திட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
கேட் மூடியிருந்த போது, கடக்க காத்திருக்கும் வாகனங்கள், எஸ்.ஆர்.சி., மில் பாலத்தை ஏன் வாகனங்கள் பயன்படுத்தவில்லை என்பது குறித்து ஆய்வு செய்து, மொபைல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
திடீர் ஆய்வு ஏன்?
ஆய்வு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'எஸ்.ஆர்.சி., மில் பாலத்தில் வாகன போக்குவரத்து குறைவாக உள்ளது; பாலம் கட்டமைப்பு குறித்து, புகார்கள் மனுக்கள் வந்தது. நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனால், ஆய்வு நடத்தப்பட்டது; அறிக்கை சமர்பிக்கப்படும்,' என்றனர்.
இது குறித்து, தமிழக அரசுக்கு தொடர்ந்து மனு கொடுத்த, பாளையக்காடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் கூறுகையில், ''எஸ்.ஆர்.சி., மில் பகுதியில் புதிய பாலம் கட்டியும் பயனில்லை; பாலம் வடிவமைப்பில் தவறு உள்ளது.
யூனியன் மில் ரோடு - கொங்கு மெயின் ரோடு இணைக்க பாலம் கட்டினால், வாகனங்கள் வடக்கில் இருந்து தெற்குக்கு எளிதில் சென்று விட முடியும். இப்பகுதியில் பாலம் கட்டியிருக்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தேன். அதன்படி ஆய்வு நடத்தப்பட்டதாக, அதிகாரிகள் கூறினர்,'' என்றார்.

