ADDED : அக் 03, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில், இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் சார்பில், இன்ஜினியர்ஸ் தினம் மற்றும் கூட்டம் நடந்தது. இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் கையேடு பிரிவு தலைவர் ஜெயபாலன், உடுமலை மையத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் ரவிசங்கர், பொருளார் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மின் வாரிய உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், இளமதி, சென்சூரி கன்ஸ்ட்ரக்ஸன் உரிமையாளர் சுந்தரம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், வரும், 2025ம் ஆண்டில், கட்டுமான கண்காட்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.