/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இளைஞர் சைக்கிள் பயணம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இளைஞர் சைக்கிள் பயணம்
ADDED : ஜூலை 30, 2025 10:24 PM

திருப்பூர்; சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் மேற்கு வங்க வாலிபரை திருப்பூரில் வரவேற்றனர்.
மேற்கு வங்கம், லால்கோலா முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் பிரசன்ஜித் தாஸ், 26; பி.ஏ., பட்டதாரி. சுற்றுச்சூழல் மற்றும் ரத்தம் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜன., 4ம் தேதி மேற்கு வங்கத்தில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கினார். அங்கிருந்து, ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, புதுச்சேரி, இலங்கை, கேரளா சென்று பின் மீண்டும் கோவை வழியாக திருப்பூருக்கு வந்தார். அவரை திருப்பூர் லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல், செயலாளர்கள் ரகுநாதன், அருண் மற்றும் பொருளாளர் நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அவருக்கு தங்க இடம், உணவு ஏற்பாடு உள்ளிட்டவை செய்து கொடுத்தனர். 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தனர்.
---
சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் பிரசன்ஜித் தாஸூக்கு, திருப்பூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

