/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
பிரதான ரோட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2025 08:39 PM
உடுமலை; மடத்துக்குளம் - கணியூர் ரோட்டில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், அமைந்துள்ள செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் - தாராபுரம் ரோட்டில், கணியூர், காரத்தொழுவு, சோழமாதேவி, வேடபட்டி என 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், விவசாய நிலங்கள், பள்ளிகள் உள்ளன.
இந்நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான ரோட்டின் இரு புறமும் ஒரு கி.மீ.,சுற்றளவில் செங்கல் சூளைகள் அமைக்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு விதிமீறி, ஏராளமான செங்கல்சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து வெளியேறும் புகையால், ரோடு முழுவதும் புகை மூட்டமாக மாறுவதோடு, சுற்றுப்புற கிராம மக்களும், கால்நடைகளும், மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கின்றனர்.
எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், விதிமீறி செயல்படும் செங்கல் சூளைகளை அகற்றவும் வேண்டும், என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.