/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்; மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்
/
சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்; மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்; மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்; மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : டிச 13, 2024 08:33 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளில் அமைக்கப்பட்ட, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமைப்படை செயல்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில், 250 பசுமைப்படை மற்றும் 359 சுற்றுச்சூழல் மன்றங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுகின்றன.
இதுகுறித்து மாணவர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையங்கள் மாவட்டத்தில், நான்கு இடங்களில் மட்டுமே இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சேர்த்து, உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தகவல் மையம்அமைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் வைத்து நுாலகமாகவும், மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகளை நடத்தவும், இந்த மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் தற்போது இந்த மையம் செயல்பாடில்லாமல் உள்ளது. மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து போட்டிகளை நடத்தவும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மீண்டும் இந்த மையத்தை செயல்படுத்த வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.