/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இ.பி.எஸ்., நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்'
/
'இ.பி.எஸ்., நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்'
'இ.பி.எஸ்., நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்'
'இ.பி.எஸ்., நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்'
ADDED : பிப் 03, 2024 03:50 AM
பனமரத்துப்பட்டி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில், சேலம் மாவட்டத்தில் முதல் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம், நிலவாரப்பட்டியில் நேற்று நடந்தது. பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் வரவேற்றார். வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து தலைமை வகித்து பேசியதாவது:
சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விலைவாசியை உயர்த்திவிட்டனர். தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம். சேலம் லோக்சபா தேர்தலில், இ.பி.எஸ்., நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். இ.பி.எஸ்., யாரை கைகாட்டுகிறாரோ, அவர் இந்தியாவுக்கே பிரதமராக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி நல்லப்பன், கிளை செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. அதில் ஒன்றிய துணை செயலர் குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

