/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி
/
பள்ளிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி
ADDED : ஏப் 11, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டினால் ஏற்படும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், மாணவர்கள், ஆசிரியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்தனர். தலைமையாசிரியர் தாரணி மற்றும் ஆசிரியர் கண்ணபிரான் சமத்துவத்தை பின்பற்றுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.