ADDED : பிப் 03, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 8வது வார்டு ஊர் பொதுமக்கள் சார்பில், சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா போயம்பாளையம் பழனிச்சாமி நகர் காமாட்சியம்மன் கோவில் திடலில் நடந்தது.
வார்டு கவுன்சிலர் வேலம்மாள், தலைமை வகித்தார். சாக்கு போட்டி, ஓட்ட பந்தயம், கயிறு இழுத்தல், உரியடித்தல், மியூசிக் சேர் என சிறுவர், சிறுமியர் - பெரியவர்கள் என தனி தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மாலை சமத்துவ பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மும்மதத்தினர் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

