/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை: பிரதமர் மோடி காணொலியில் திறப்பு
/
திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை: பிரதமர் மோடி காணொலியில் திறப்பு
திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை: பிரதமர் மோடி காணொலியில் திறப்பு
திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை: பிரதமர் மோடி காணொலியில் திறப்பு
ADDED : பிப் 26, 2024 02:25 AM

திருப்பூர்:திருப்பூரில், 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ., மருத்துவமனையை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
திருப்பூர், பூலுவபட்டி - திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள செட்டிபாளையத்தில், 7.4 ஏக்கர் பரப்பில், 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையை குஜராத் மாநிலம், ராஜ்கோட், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்தபடி, காணொலி வாயிலாக பிரதமர் மோடி, நேற்று மாலை திறந்து வைத்தார்.
திருப்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, இ.எஸ்.ஐ., தெற்கு மண்டல மருத்துவ ஆணையர் சுனிதா சோப்ரா தலைமை வகித்து, கல்வெட்டை திறந்து வைத்தார். கல்வெட்டை திறந்த போது, முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமி, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் கோவிந்தப்பன், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பினர், பா.ஜ.,வினர், பார்வையாளர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்தனர்.
அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,வரவில்லை
நிகழ்ச்சியில் பங்கேற்க, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் எம்.பி., சுப்பராயன்(இ.கம்யூ.,), எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ் (தி.மு.க.,), ஆனந்தன், விஜயகுமார் (அ.தி.மு.க.,) அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடியும் வரை அவர்கள் வரவில்லை; இருக்கைகள் காலியாகவே இருந்தது.
மின் தடையால் பரபரப்பு
நிகழ்ச்சி துவங்கிய சில நிமிடங்களில், திடீரென மின்தடை ஏற்பட்டது. இணைப்பு வழங்கப்பட்டிருந்த லேப்டாப், ஸ்கிரீன்கள் ஒரே நேரத்தில், அணைந்தன.
பார்வையாளர்கள் ஸ்கிரீனில் எதுவும் வரவில்லை எனக்கூற, ஏற்பட்டாளர்கள் 'கரென்ட் போச்சு' என கூறியதால், சலசலப்பு ஏற்பட்டது.
இரண்டு நிமிட காத்திருப்புக்கு பின், மின்வினியோகம் வந்தது. இ.எஸ்.ஐ., அதிகாரிகள் 'அப்பாடா 'என பெருமூச்சு விட்டனர்.

