/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளி குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவி
/
தொழிலாளி குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவி
ADDED : ஏப் 09, 2025 07:09 AM

பல்லடம்; பல்லடத்தில், பணியின் போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு, இ.எஸ்.ஐ., சார்பில், பென்ஷன் மற்றும் மாதாந்திர உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் நாராயணசாமி, 61. பல்லடம் அருகே, கரைப்புதுாரில் உள்ள தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த, 2016ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு, இ.எஸ்.ஐ., சார்பில், பென்ஷன் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.
பல்லடம் கிளை மேலாளர் ராஜா, தொழிலாளியின் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்கினார். தனியார் நிறுவன மேலாளர் சுரேஷ் மற்றும் இ.எஸ்.ஐ., அலுவலர்கள் ஜெயக்குமார், சவுந்திரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகைக்காண ஆணை மற்றும் 5.29 லட்சம் ரூபாய் உதவித்தொகை ஆகியன வழங்கப்பட்டன.

