/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய அங்கன்வாடி மையம் அமையுங்க!
/
நகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய அங்கன்வாடி மையம் அமையுங்க!
நகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய அங்கன்வாடி மையம் அமையுங்க!
நகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய அங்கன்வாடி மையம் அமையுங்க!
ADDED : ஜன 22, 2025 07:47 PM
உடுமலை; உடுமலை ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, பெரியார் நகர், நாராயணன் காலனி பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.
இதைச்சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, அங்கன்வாடி மையம் பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ளது.
தொலைதுாரமாக இருப்பினும், வேறு மையம் இல்லாததால், குழந்தைகளை அங்கு விடுகின்றனர்.
அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள், அந்த பள்ளியில் வகுப்புகளை தொடர்கின்றனர். பள்ளியின் சுற்றுப்பகுதிகளான, ஆண்டாள் சீனிவாசன் லே - அவுட், காந்திநகர், ஐஸ்வர்யா நகர் வரை அங்கன்வாடி மையங்கள் எதுவும் இல்லை.
அங்கன்வாடி மையம் ஒரு பள்ளியிலும், ஒன்றாம் வகுப்பு முதல் வேறு பள்ளியிலும் குழந்தைகளை மாற்றுவது சிரமமாக இருப்பதால், பெற்றோர் இப்பள்ளியில் குழந்தைகளை விடவும் தயங்குகின்றனர்.
ராஜலட்சுமி நகரில் நகராட்சி துவக்கப்பள்ளி இருப்பதால், இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
இப்பள்ளியில் மையம் அமைப்பதால், அருகிலுள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கல்வித்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

