/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐரோப்பிய பறவை திருப்பூரில் வலசை! முதன்முறையாக தென்பட்டதால் வியப்பு
/
ஐரோப்பிய பறவை திருப்பூரில் வலசை! முதன்முறையாக தென்பட்டதால் வியப்பு
ஐரோப்பிய பறவை திருப்பூரில் வலசை! முதன்முறையாக தென்பட்டதால் வியப்பு
ஐரோப்பிய பறவை திருப்பூரில் வலசை! முதன்முறையாக தென்பட்டதால் வியப்பு
ADDED : ஜன 03, 2024 12:50 AM

திருப்பூர் :ஐரோப்பாவை தாயகமாக கொண்ட 'வளைமூக்கு உள்ளான்' பறவை, திருப்பூர் நஞ்சநராயன் குளத்தில் வலசை வந்தது; இதன் வாயிலாக, அக்குளத்துக்கு வந்த பறயைினங்களின் எண்ணிக்கை கூடியது.
திருப்பூர், நஞ்சராயன் குளத்துக்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம்; நிரந்தரமாக, அக்குளத்தையே தங்களின் வாழ்விடமாக கொண்டுள்ள பறவையினங்களும் உள்ளன. நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வனத்துறை வாட்சர் சிவமணி, கண்ணில் தென்பட்ட ஒரு புதிய பறவையை இனங்கண்டு, திருப்பூர் இயற்கை கழக உறுப்பினர் கீதாமணியிடம் தெரிவித்தார்.
அந்த பறவை, 'வளைமூக்கு உள்ளான்' என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, இயற்கை கழக நிறுவனர் ரவீந்திரன், உறுப்பினர் மனோஜ் ஆகியோரும், அந்த பறவையை கண்காணித்தனர்.
இது குறித்து, ரவீந்திரன் கூறியதாவது:
ஐரோப்பிய கண்டத்தை தாயகமாக கொண்ட 'வளைமூக்கு உள்ளான்' பறவை, மத்திய ஆசியா, கிழக்கு ரஷ்யாவில் மட்டுமே இருக்கும். இப்பறவை, குளிர்கால வலசையாக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம். கூட்டம், கூட்டமாக, கடற்கரையோரங்களில் மட்டுமே வலசை வரும். உள்நாட்டு நீர்நிலைகளில், மிக அரிதாக மட்டுமே இப்பறவை தென்படும். அந்த வகையில் கடந்த, 30 ஆண்டுக்கு முன் தாராபுரம், நல்லதங்காள் அணை பகுதியில் இப்பறவை தென்பட்டதாக, தாராபுரம் ரேஞ்சர் சொசைட்டியினர் பதிவு செய்திருந்தனர். அதன்பின், திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் தென்பட்டிருக்கிறது. இப்பறவை, கேரள கடற்கரைக்கு செல்லும் வழியில், இக்குளத்துக்கு வந்ததா, அல்லது இங்கேயே வலசை இருக்குமா என்பதை தொடர் கண்காணிப்புக்கு பிறகு தான் உறுதிபடுத்த முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.