/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அமெரிக்கா 500 சதவீதம் வரி உயர்த்தினாலும் பாதிப்பு வராது'
/
'அமெரிக்கா 500 சதவீதம் வரி உயர்த்தினாலும் பாதிப்பு வராது'
'அமெரிக்கா 500 சதவீதம் வரி உயர்த்தினாலும் பாதிப்பு வராது'
'அமெரிக்கா 500 சதவீதம் வரி உயர்த்தினாலும் பாதிப்பு வராது'
ADDED : ஆக 07, 2025 11:25 PM
திருப்பூர்; 'அமெரிக்கா 500 சதவீதம் வரியை உயர்த்தினாலும் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்(டீமா) கூறியுள்ளது.
'டீமா' தலைவர் முத்துரத்தினம் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதம்:
அமெரிக்கா வரியை 50 சதவீதம் மட்டுமல்ல; 500 சதவீதம் உயர்த்தினாலும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது. நாம், அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியும். புதிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய, தொழில் துறையினர் முன் வரவேண்டும்.
அதற்கு தேவையான சிறப்பு சலுகைகள், வழிவகைகளை அரசு செய்துதரவேண்டும். அமெரிக்க வரி உயர்வால் தற்போது நஷ்டங்கள் ஏற்பட்டாலும், அதனை சரி செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்; சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.