/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிக்னல்' இருந்தும் சிக்கல் தீரலே... போராடுவதை தவிர வேற வழி தெரியலே!
/
'சிக்னல்' இருந்தும் சிக்கல் தீரலே... போராடுவதை தவிர வேற வழி தெரியலே!
'சிக்னல்' இருந்தும் சிக்கல் தீரலே... போராடுவதை தவிர வேற வழி தெரியலே!
'சிக்னல்' இருந்தும் சிக்கல் தீரலே... போராடுவதை தவிர வேற வழி தெரியலே!
ADDED : ஜன 18, 2024 12:20 AM

அனுப்பர்பாளையம் : திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல் காலனி நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு சிக்னல் பொருத்தப்பட்டது.
சிக்னல் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. அதுபோல் குடிநீர் குழாய் உடைப்பால், ரோடு அரிக்கப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் கண்டு கொள்வதில்லை.
சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியும், குடிநீர் உடைப்பு சரி செய்யப்படாததை கண்டித்தும், இ.கம்யூ கட்சி சார்பில், 21 ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, மாநகராட்சி கவுன்சிலர் செல்வராஜ் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளி, அதிக அளவில் பனியன் நிறுவனம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியும் கூட. நான்கு ரோடு சந்திப்பில், வாகனங்கள் முறையின்றி செல்வதால், தொடர் விபத்து ஏற்படுகிறது.
அதனை தடுக்கும் வகையில், இ.கம்யூ., கோரிக்கையின் பேரில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், சிக்னல் அமைத்தும் பிரயோஜனம் இல்லை. அதனால், மீண்டும் போக்குவரத்து நெருக்கடியோடு விபத்தும் ஏற்படுகிறது. அதே பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனாலும், விபத்து ஏற்படுகிறது. சீர் செய்ய மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.