/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவலை என்பது மலை என்றாலும் கவலை வேண்டாம் அவன் கை தாங்கும்
/
கவலை என்பது மலை என்றாலும் கவலை வேண்டாம் அவன் கை தாங்கும்
கவலை என்பது மலை என்றாலும் கவலை வேண்டாம் அவன் கை தாங்கும்
கவலை என்பது மலை என்றாலும் கவலை வேண்டாம் அவன் கை தாங்கும்
ADDED : டிச 31, 2024 05:52 AM

திருப்பூர் : திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதி பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அனுமன் காட்சியளித்தார். பக்தர்கள் குவிந்தனர்.
திருப்பூர் சபாபதிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை, 8:00 மணிக்கு மங்கள இசையுடன், ஆஞ்சநேய சுவாமிக்கு, சிறப்பு கலச அபிேஷகம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர்; பல்லடம் ரோடு, இந்திரா நகர் ஜெயமங்கல ஆஞ்சநேயர் கோவில் உட்பட ஆஞ்சநேயர் கோவில்களில், திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதி அனுமன் ஜெயந்தி விழா பூஜைகள் விமரிசையாக நடந்தன. திருப்பூர் ஒன்றியம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி, முட்டியங்கிணறு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பால ஆஞ்சநேயர் கோவிலில் 16 வகை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பஞ்ச முகத்துடன் ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.
சேவூர், தெப்பக்குளத்து ஆஞ்சநேயர் கோவிலில் 16 வகை திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்த பின், வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.