/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனைமரம் கூட கருகுகிறது; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
/
பனைமரம் கூட கருகுகிறது; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
பனைமரம் கூட கருகுகிறது; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
பனைமரம் கூட கருகுகிறது; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : ஆக 21, 2025 11:36 PM

பொங்கலுார்; பி.ஏ.பி., தண்ணீர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிடைக்கிறது. கடந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் பி.ஏ.பி., வாய்க்காலில், ஐந்து சுற்றுக்கு பதிலாக இரண்டு சுற்று மட்டுமே தண்ணீர் கிடைத்தது.
விவசாயத்தையே நம்பி உள்ள பொங்கலூர் ஒன்றியத்தில் பாசனம் நடைபெறாத பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள விவசாயிகள் ஏற்கனவே காய்கறி சாகுபடியை நிறுத்திவிட்டனர்.
பல்லாண்டு தாவரங்களான தென்னை விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. அதை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். எந்த வறட்சியையும் தாங்கி உயிர் வாழும் பனை மரங்கள் கூட நிலத்தடி நீர் வற்றி விட்டதால் கருகி வருகிறது.
விரைவில் புரட்டாசி பட்டம் துவங்க உள்ளது. ஆவணி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்ய துவங்குவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் நன்றாக மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.