/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினம் தினம் 'திகில்' இரவு;' கொலைக்கு அஞ்சாத மாபாதகர்கள்; துாக்கம் தொலைத்த விவசாயிகள்
/
தினம் தினம் 'திகில்' இரவு;' கொலைக்கு அஞ்சாத மாபாதகர்கள்; துாக்கம் தொலைத்த விவசாயிகள்
தினம் தினம் 'திகில்' இரவு;' கொலைக்கு அஞ்சாத மாபாதகர்கள்; துாக்கம் தொலைத்த விவசாயிகள்
தினம் தினம் 'திகில்' இரவு;' கொலைக்கு அஞ்சாத மாபாதகர்கள்; துாக்கம் தொலைத்த விவசாயிகள்
ADDED : மே 10, 2025 02:33 AM
கும்மிருட்டு கவ்வ, வீட்டு முற்றத்தின் வெட்ட வெளியில், நிலா வெளிச்சத்தில் பாய் மர கட்டில் விரித்து, உறங்கும் விவசாயி தான், தன் தோட்டத்தில் விளைந்து கொண்டிருக்கும் பயிருக்கும், பட்டி கட்டி அதில் வளர்த்து கொண்டிருக்கும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கும் காவல்காரர்களாக இருந்து வருகின்றனர்;
இளம் வயதினர் மட்டுமின்றி, முதியவர்கள் கூட இப்படி தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.ஆனால், இன்று இத்தகைய சூழல் இல்லை என்பது தான் விவசாயிகளின் ஆதங்கம். அதுவும், ஒதுக்குப்புற கிராமங்களில் உள்ள தோட்டத்து வீடுகளில் கொலை, கொள்ளை சம்பவம் தொடரும் நிலையில், இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே விவசாயிகள் அஞ்சுகின்றனர். 'இதனால், தங்களின் பயிர் மற்றும் கால்நடைகளை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்பது அவர்களின் ஆதங்கம்.சமீப ஆண்டுகளாக திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் வயதான தம்பதியரை 'குறி' வைத்து தாக்கி, கொலை செய்து, நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து செல்கின்றனர்,
மர்ம நபர்கள். குற்றவாளிகளை பிடிப்பது என்பது, போலீசாருக்கு மிகப்பெரும் சவாலாக மாறியிருக்கிறது.விவசாயிகள் சிலர் கூறியதாவது:முந்தைய காலங்களில் தோட்டத்து வீடுகளில் வசிப்போர், பயிர்களை கண்காணிக்கவும், தங்கள் விவசாய நிலங்களில் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில், வெளியில் கட்டில் விரித்து நிம்மதியாக உறங்குவர்; சிறிய சத்தம் வந்தால் கூட, உஷாராகி விடுவர். ஆனால், தற்போது அத்தகைய நிலையில்லை. இரவில், வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பயப்பட வேண்டி இருக்கிறது.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல இடங்களில், தோட்டத்து வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை, தெரு நாய்கள் கடித்து கொல்கின்றன. ஒரு ஆண்டாக இது, தொடர்கிறது. அதனை தடுக்க கூட விவசாயிகளால் வெளியில் வர முடியாத நிலையுள்ளது. அந்தளவுக்கு, மரண பயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் இரவு ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இரவு நேரங்களில், வெளியில் கட்டில் விரித்து நிம்மதியாக உறங்குவர். சிறிய சத்தம் வந்தால் கூட, உஷாராகி விடுவர். ஆனால், தற்போது அத்தகைய நிலையில்லை. இரவில், வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பயப்பட வேண்டி இருக்கிறது