/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்லாம் டிஜிட்டல் மயம்! நவீன உற்பத்தி கேந்திரமாக மாறும் திருப்பூர்; 'ஸ்டார்ட்அப்' திட்டத்தில் அதிகபட்ச வாய்ப்பு
/
எல்லாம் டிஜிட்டல் மயம்! நவீன உற்பத்தி கேந்திரமாக மாறும் திருப்பூர்; 'ஸ்டார்ட்அப்' திட்டத்தில் அதிகபட்ச வாய்ப்பு
எல்லாம் டிஜிட்டல் மயம்! நவீன உற்பத்தி கேந்திரமாக மாறும் திருப்பூர்; 'ஸ்டார்ட்அப்' திட்டத்தில் அதிகபட்ச வாய்ப்பு
எல்லாம் டிஜிட்டல் மயம்! நவீன உற்பத்தி கேந்திரமாக மாறும் திருப்பூர்; 'ஸ்டார்ட்அப்' திட்டத்தில் அதிகபட்ச வாய்ப்பு
ADDED : மே 03, 2025 04:57 AM

திருப்பூர்; திருப்பூர், 'டி-சர்ட்' போன்ற பின்னலாடை உற்பத்திக்கு மட்டுமல்ல, இனிவரும் ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சிக்குமான நகரமாக உயரப்போகிறது. அதற்கான முயற்சிகள், மத்திய, மாநில அரசு திட்டங்கள் வாயிலாக துவங்கியுள்ளன.
உலக அளவில் பின்னலாடை உற்பத்தி இயந்திர வடிவமைப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டு தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்து, புதிய பயணத்தை துவக்க, திருப்பூர் தொழில்துறையினர் தயாராக வேண்டும் என்பதே, மத்திய, மாநில அரசு திட்டங்களின் இலக்காக இருக்கிறது.
உலக அளவிலான, முன்னணி நிறுவனங்களில், 'டார்க் பேக்டரி' - 'ஏஐ' - 'கோபோட்' மற்றும் 'டிஜிட்டல் ட்வின்' போன்ற தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. மனித ஆற்றலின் தேவைகளை குறைந்து, திறமையான, வேகமான மற்றும் குறைந்த செலவிலான உற்பத்தியை உறுதி செய்கின்றன. மனிதர்களுடன் இணைந்து, பாதுகாப்பான 'ரோபோ'க்கள் செயல்படுவது, 'கோபோட்' எனப்படுகிறது. திருப்பூர் பனியன் நிறுனங்களில், உற்பத்தி, சரிபார்த்தல், துணிகளை மடித்தல், 'பேக்கிங்' போன்ற பணிகளையும் எளிதாக்க முடியும்.
'டிஜிட்டல் ட்வின்'
தொழிற்சாலை இயக்கத்தை, முற்றிலும் கம்ப்யூட்டரில் கொண்டு வருவது, 'டிஜிட்டல் ட்வின்' எனப்படுகிறது. முழு உற்பத்தி செயல்பாடுகளையும், ஒரு கம்ப்யூட்டர் மாதிரியாக உருவாக்கி, எந்நேரமும் உற்பத்தி நிலையை கண்காணிக்கலாம். இயந்திர பழுதுகளையும், முன்கூட்டியே அறிந்து சீரமைக்கவும் முடியும்.
பின்னலாடை வடிவமைப்புக்கான அளவீடு வடிவமைப்பு, 'ஸ்மார்ட் கட்டிங்', உற்பத்தி கழிவு வெளியேற்றத்தை குறைப்பது போன்றவற்றில், 'ஏஐ' தொழில்நுட்பம் அவசியமாகிறது. ஒவ்வொரு பிரிவிலும், தானியங்கி தொழில்நுட்ப இயந்திரங்களை அமைப்பது, 'டார்க் பேக்டரி' எனப்படுகிறது.
அமெரிக்க நிறுவனங்களில் செயல்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களை, திருப்பூர் நேரடியாக பயன்படுத்த தயாராக வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகள் உயர்ந்தாலும், வாய்ப்புகளை வரவேற்று, 'ஸ்டார்ட் அப்' திட்ட பங்களிப்புடன் உற்பத்தியை கச்சிதமாக முடிக்க முடியும் என்பது, தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசின் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''புதிய தொழில்நுட்பத்தால், பின்னலாடை தொழில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு விரைவாக நகர்ந்து செல்ல முடியும். தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைத்து, மாணவர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் வாயிலாக, புதிய தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை, 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் மூலமாக செய்து வருகிறோம். கடுமையான உழைப்பால் கிடைக்கும் உற்பத்தி என்பது, நவீன தொழில்நுட்பத்தில் உருவான உற்பத்தி என்று மாற்றப்படும்,'' என்றார்.
தொழிற்சாலை இயக்கத்தை, முற்றிலும் கம்ப்யூட்டரில் கொண்டு வருவது, 'டிஜிட்டல் ட்வின்' எனப்படுகிறது. முழு உற்பத்தி செயல்பாடுகளையும், ஒரு கம்ப்யூட்டர் மாதிரியாக உருவாக்கி, எந்நேரமும் உற்பத்தி நிலையை கண்காணிக்கலாம்