/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனை கூட்டம்
/
முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 01, 2024 10:59 PM
உடுமலை; உடுமலையில், முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
உடுமலை -- பொள்ளாச்சி ரோடு லெப்டினென்ட்சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில், முன்னாள் ராணுவ வீரர் நல சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
பொருளாளர் சிவக்குமார், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் மகேஷ்பாபு, சுபேதார் நடராஜ், அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
உறுப்பினர்களின் பணிக்கால ஆவணங்களை சரிசெய்து கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மருத்துவ உதவி முறைப்படி பெறுவது குறித்தும், மாணவர்களை முப்படையில் சேர்ப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.
சங்க உதவி செயலாளர் சுபேதார் நடராஜன் நன்றி தெரிவித்தார்.