/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்வு விடுமுறை நிறைவு; நாளை பள்ளிகள் திறப்பு
/
தேர்வு விடுமுறை நிறைவு; நாளை பள்ளிகள் திறப்பு
ADDED : அக் 04, 2025 11:25 PM
திருப்பூர்: காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து, நாளை (அக். 6) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இன்று பள்ளிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு, செப். 10ல் துவங்கி, 26ம் தேதி வரை நடந்தது. செப். 27 முதல் அக். 5ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறையுடன் காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்த நிலையில், நாளை (6ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பள்ளி திறப்புக்கு முன் பின்பற்ற வேண்டிய முன்னேற்பாடு குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வித்துறை மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி வளாகங்களில் நகராட்சி ஊழியர்கள் மூலம் துாய்மை பணி நடக்கிறது.
சென்னையில் இருந்து தருவிக்கப்பட்ட புத்தகங்கள் குப்பாண்டாம்பாளையம் அரசு பள்ளியில் இருந்தும், நோட்டுக்கள் 15 வேலம்பாளையம் அரசு பள்ளியில் இருந்தும் பல்லடத்துக்கு வந்தடைந்துள்ளது.
வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்ட இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள், நாளை காலை பள்ளிகள் திறந்து, இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன், மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.