sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்கலை தேர்வில் சிறப்பிடம்; சிக்கண்ணா கல்லுாரி அபாரம்

/

பல்கலை தேர்வில் சிறப்பிடம்; சிக்கண்ணா கல்லுாரி அபாரம்

பல்கலை தேர்வில் சிறப்பிடம்; சிக்கண்ணா கல்லுாரி அபாரம்

பல்கலை தேர்வில் சிறப்பிடம்; சிக்கண்ணா கல்லுாரி அபாரம்


ADDED : அக் 08, 2025 11:54 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பாரதியார் பல்கலை தேர்வில், பல்கலை அளவில், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், 14 பேர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.இளநிலை பட்ட வகுப்புகளில், சர்வதேச வணிகவியல் துறையில், கீரன் கவுதமன் தங்கப்பதக்கம், மைத்ரேயன் வெள்ளி பதக்கம் வென்றனர். இதே துறையில் காயத்ரி, ஐந்தாமிடம்; மோனிகா, ஏழாமிடம்; கண்ணன், 10ம் இடம் பிடித்தனர்.

விலங்கியல் துறையில், யாஸ்மின் நான்காமிடம்; பொருளியல் துறையில், சக்திவேல், ஏழாமிடம் பெற்றனர்.முதுநிலைபட்ட வகுப்புகளில், சர்வதேச வணிகவியல் துறையில் லக்ஷணா மூன்றாமிடம்; கோகிலா, ஏழாமிடம்; அபர்ணா, எட்டாமிடம்; பவித்ரா, 10ம் இடம் பிடித்தனர். வேதியியல் துறையில் கவுசல்யா, நான்காமிடம்; தமிழ் இலக்கியத்தில், மைத்ரா, 9ம் இடம் பிடித்தார்.பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை, கல்லுரி முதல்வர் கிருஷ்ணன், கல்லுாரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பொமற்றும் துறைத் தலைவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us