/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருவியில் உற்சாக குளியல்; கண்காணிப்பு தீவிரம்
/
அருவியில் உற்சாக குளியல்; கண்காணிப்பு தீவிரம்
ADDED : அக் 05, 2025 11:34 PM

உடுமலை; பஞ்சலிங்க அருவியில், சீரான நீர் வரத்து இருந்ததால், சுற்றுலா பயணியர் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவிக்கு, தொடர் விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. நேற்று அருவியில் சீரான நீர் வரத்து இருந்தது.
இதனால், சுற்றுலா பயணியர் உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகளவு இருந்ததால், கோவில் நிர்வாகம் தரப்பில் கூடுதல் பணியாளர்கள் நியமித்து கண்காணிப்பு செய்யப்பட்டது. திருமூர்த்திமலை அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.