நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்து முன்னேற்ற கழகம் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில நிறுவன தலைவர் கோபிநாத் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில், தமிழகத்தில் இருந்து பல பகுதிகளில் இருந்து திருப்பூரில் குடியேறி, வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடிட, இந்தாண்டு கூட்ட நெரிசலை சீர்படுத்தி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லாமல் போலீசார் பணியாற்றினர்.
மாநகர போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாநகரில் எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. பாறை குழிகளில் கொட்டி வருவதால், நிலத்தடி நீர், கிணற்று நீர் மாசுபட்டு விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் தீர்வு எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

