/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விரிவுபடுத்தப்பட்ட 'விருத்தி பொட்டிக்'
/
விரிவுபடுத்தப்பட்ட 'விருத்தி பொட்டிக்'
ADDED : செப் 23, 2024 12:31 AM

திருப்பூர் : திருப்பூர், கருவம்பாளையம், ஏ.பி.டி., ரோடு 2வது வீதியில், விரிவுபடுத்தப்பட்ட விருத்தி பொட்டிக்(boutique) பெண்கள் ஆடையகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கிட்ஸ் கிளப் கல்விக்குழுமங்களின் தலைவரும், திருப்பூர் தமிழ்ச்சங்க செயலாளருமான மோகன் கார்த்திக் ஷோரூமை திறந்து வைத்தார்.
பப்பீ ஷேம் நிறுவன நிர்வாக செயல் அலுவலர் மஞ்சுளா மணிகண்டன் குத்துவிளக்கு ஏற்றினார். டி.எஸ்.பி., நிட்டிங் நிறுவன நிர்வாக செயல் அலுவலர் பானுப்பிரியா முதல் விற்பனையை துவக்கிவைத்தார்; ஸ்ரீ வேல்முருகன் புளூ மெட்டல்ஸ் ராஜேஸ்வரி பெற்றுக்கொண்டார்.
விருத்தி பொட்டிக் ஷாப் உரிமையாளர் தீபிகா அருண் கூறுகையில், '' விரிவுபடுத்தப்பட்ட ஷோரூமாக 'விருத்தி பொட்டீக்' மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இரண்டு தளங்களில், சிறுமியர் முதல் பெண்களுக்கான சுடிதார், குர்தீஸ் உள்பட அனைத்து ஆடை ரகங்கள், திருமண ஆடைகள் உள்ளன.
பெண்கள் தையலகமும் செயல்படுகிறது. சுடிதார், பிளவுஸ் உள்பட பெண்களுக்கான ஆடைகள் சிறந்த முறையில் தைத்துக்கொடுக்கப்படும். ஷோரூமை, 63829 55447 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்றார்.