/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிச்சூழலை மாற்றும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கல்வித்துறை செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
பள்ளிச்சூழலை மாற்றும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கல்வித்துறை செயல்படுத்த எதிர்பார்ப்பு
பள்ளிச்சூழலை மாற்றும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கல்வித்துறை செயல்படுத்த எதிர்பார்ப்பு
பள்ளிச்சூழலை மாற்றும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கல்வித்துறை செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 17, 2025 11:48 PM
உடுமலை, ; அரசு பள்ளியின் வளாகத்தை, இயற்கை சூழலாக மாற்றும் பள்ளி வளர்ச்சித் திட்டத்துக்கு, கல்வித்துறை முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடை உட்பட பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, அவர்களின் கற்றல் திறன் மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழலின் தரத்தை உயர்த்தும் வகையில், பள்ளி முழு வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவதற்கு அறிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பிடித்தமான கல்விச்சூழலை ஏற்படுத்தும், பள்ளிச் சூழலை அமைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
இத்திட்டத்தில், பள்ளியின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை தவிர, பள்ளிச்சூழலை மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு, பள்ளி நிர்வாகத்திடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
ஆவலுடன் தங்களின் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து கருத்துரு அனுப்பினர்.
இதில், பள்ளியின் சூழலில், ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை சுவர்களில் அச்சிடுவது, கழிப்பறை சுற்றுச்சுவர்களில் துாய்மை, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வகையிலான வண்ண ஓவியங்களை வரைவது, பள்ளியிலுள்ள மரங்களை சுற்றி, இருக்கைகள் அமைத்து, மரங்களின் பயன்களை வடிவமைப்பது, இயற்கை சூழலில் பாடம் நடத்துவதற்கான ஏற்பாடு, துாய்மை, கல்வியின் முக்கியத்துவம் குறித்த வாசகங்களை வகுப்பறை சுவர்களில் அமைப்பது போன்ற ஏற்பாடுகள், இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அறிவிப்புடன் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மாதிரி பள்ளிகளாக சில பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்குத்தேவையான வசதிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இருப்பினும், இத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்குமானதாக இருப்பதாலும், பள்ளிச்சூழலை முழுமையாக மாணவர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதால், கல்வித்துறை இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.