/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் குறுமிளகு சாகுபடி மானியம் வழங்க எதிர்பார்ப்பு
/
தென்னையில் குறுமிளகு சாகுபடி மானியம் வழங்க எதிர்பார்ப்பு
தென்னையில் குறுமிளகு சாகுபடி மானியம் வழங்க எதிர்பார்ப்பு
தென்னையில் குறுமிளகு சாகுபடி மானியம் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 04, 2025 12:33 AM
உடுமலை:
தென்னையில், குறுமிளகு உள்ளிட்ட ஊடுபயிர் சாகுபடிக்கு தேவையான மானிய திட்டங்களை, அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், தேங்காய் உற்பத்தி பாதித்து, வருவாய் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
எனவே, இழப்பை ஈடுகட்ட தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வகையில், குறுமிளகும் சாகுபடி செய்யலாம்.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மத்திய அரசின், 'ஸ்பைசஸ் போர்டு' வாயிலாக, குறுமிளகு சாகுபடிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வாரியம் வாயிலாக புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
எனவே, வேளாண்துறையினர், தோட்டக்கலைத்துறையினர் 'ஸ்பைசஸ் போர்டு'டன், ஒப்பந்தம் செய்து, உடுமலை பகுதியில், குறுமிளகு சாகுபடிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாற்று மற்றும் இடுபொருட்கள் உள்ளிட்டமானியத்திட்டங்களையும் செயல்படுத்த தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.