/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலாவதியான மருந்து அதிகாரிகள் ஆய்வு
/
காலாவதியான மருந்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 20, 2025 03:10 AM
காங்கயம்: காங்கயத்தில், ரோட்டோரம் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
காங்கயம், பொத்திபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அவிநாசிபாளையம் புதுாரில், அர்த்தநாரிபாளையம் - காளிவலசு ரோட்டோரம் மூட்டைகள் கிடந்தது. அப்பகுதி மக்கள் பிரித்து பார்த்த போது, தமிழக அரசின் முத்திரை பதித்த மருந்து பாட்டில்கள், சிரிஞ்ச், மாத்திரை ஆகியன பெட்டி, பெட்டியாக இருந்தது. இவை அனைத்தும், பிப். மாதமே காலாவதியான மருந்து என்பது தெரிந்தது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், நேற்று சம்பவ இடத்துக்கு சென்ற உதவி திட்ட மேலாண்மை இயக்குனர் (மாவட்ட சுகாதாரத்துறை) ரமணன், மாவட்ட சுகாதாரத்துறை இரண்டாம் நிலை அதிகாரி சீனிவாசன், சாவடிபாளையம் சுகாதார நிலைய மருத்துவர் விஜயகுமார், பச்சாபாளையம் சுகாதார நிலைய டாக்டர் சங்கரி ஆகியோர் மருந்துகளை ஆய்வு செய்தனர்.
மேலும், இந்த மருந்து, குள்ளம்பாளையத்தில் உள்ள மருந்து கிடங்கில் இருந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பட்டவை. பொதுவான பெயர்கள் மட்டுமே உள்ளது.
யார் இங்கு வந்து கொட்டியது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

