/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலாவதி உணவு பொருள் 'பினாயில்' ஊற்றி அழிப்பு
/
காலாவதி உணவு பொருள் 'பினாயில்' ஊற்றி அழிப்பு
ADDED : நவ 07, 2025 09:46 PM

பல்லடம்: பல்லடம் பகுதியில், ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையினர், காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம், 52 கடைகளில் நடந்த ஆய்வை தொடர்ந்து, 7.5 கிலோ காலாவதியான கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் 1.5 கிலோ செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட டீ துாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், 5 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, 6 கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டதுடன், 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுப் பொருள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, தொழில் செய்ய வேண்டும் என்றும், பயன்படுத்திய எண்ணெய்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

