/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு மாத விழா; விதிமுறைகள் குறித்து விளக்கம்
/
சாலை பாதுகாப்பு மாத விழா; விதிமுறைகள் குறித்து விளக்கம்
சாலை பாதுகாப்பு மாத விழா; விதிமுறைகள் குறித்து விளக்கம்
சாலை பாதுகாப்பு மாத விழா; விதிமுறைகள் குறித்து விளக்கம்
ADDED : ஜன 19, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், இம்மாதத்தில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், உடுமலை நகர பகுதியில், பத்து பொன்னான சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வாகன ஓட்டுநர்களுக்கு வினியோகித்தனர்.
நிகழ்ச்சியை, ஆர்.டி.ஓ., நாகராஜன் துவக்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.